Friday, August 7, 2015

விமானம் பறப்பது எப்படி....?

 அறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி… எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

Thursday, August 6, 2015

கடி ஜோக்ஸ் 😁

டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
🔗எந்த பாட்டுக்கு?
......................................................
🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
🔗நோயோடதான்!
.......................................................
☑தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
🔗அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
....................................................................
🔘டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
🔗கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?
.....................................................................
☑டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?
....................................................................
🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
........................................................................
☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
🔗புக்கை மூடிடுவேன்!
........................................................................
🔘காலில் என்ன காயம்?
🔗செருப்பு கடித்து விட்டது
🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!
..............................................................
☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!
.......................................................................
🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!
...........................................................................
☑டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
🔗என்னிடம் சுத்தமா இல்ல
🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
....................................................................
🔘இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
..............................................................
☑சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
.................................................................
🔘இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
🔗 ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய
மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!
.....................................................................
☑மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப்
பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
தத்து பித்து
கண்ணா நீ...
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்…

ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதை மாதிரி இருந்தாலும் நெகடிவ்ல பிசாசு மாதிரி தான் இருப்பா..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே !
வருத்த படாதே !
ஃபீல் பண்ணாதே !
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் !
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
காதல் ஒரு மழை
மாதிரி ,
நனையும் போது சந்தோஷம்,
நனைந்த பின்பு ஜலதோஷம்..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?..
ஐந்து கேள்விப்பா..
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?..
முதல் மூணும், கடைசி இரண்டும்..
வெரிகுட் கீபிடப்...
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ???
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?..
டாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்...
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் ...
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி பாக்குறா.. ”எந்த அளவுக்கு பாக்குறாங்க?”..
கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குறா..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க..
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை பத்திரமா இருக்கும்..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
ஒரு காப்பி எவ்வளவு சார் ?..
5 ரூபாய்..
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?...
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !!!!
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு....
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்..
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பூவைக் கொண்டு எறியுங்கள்..
மீண்டும் கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பூந்தொட்டியைக் கொண்டு எறியுங்கள்..
கொய்யால!
சாவட்டும்...

Saturday, July 25, 2015

அதிசய விளக்கும், அதிகாரியின் ஆசையும்...!

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,
"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது.
மூவருக்கும் ஆச்சரியம்!
உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார்.

Sunday, June 14, 2015

டாக்டர்... மருத்துவமுறையை மாற்றுங்கள்...

மருத்துவமுறையை மாற்றுங்கள்...
========================================= 

டாக்டர்...
வாயைத்திற என்பீர்கள்!
வயிறு தெரியும்படி
வாய்திறப்போம்!
நாக்கைநீட்டு என்பீர்கள்!
கல்கத்தா காளியாய்
நாக்கை நீட்டுவோம்!
முதுகைத்திருப்பி
மூச்சிழு என்பீர்கள்!
அப்போதுதான்
உண்மையாய் சுவாசிப்போம்!
அவ்வளவுதான்!
அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்!
வாசிக்கமுடியாத கையெழுத்தில்

Wednesday, June 3, 2015

உங்கள் போன்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..

ரம்பத்தில் அழைப்புகளை மேற்கொண்டு முக்கியமான தகவல்களை வேகமாக பறிமாறி கொள்ள கண்டறியப்பட்ட மொபைல் போன் இன்று பல விதங்களில் முன்னேறி விட்டது. இன்று அனைவரும் மொபைல் மூலம் பல வேலைகளை சுலபமாக செய்து வரும் நிலையில் மொபைல் போன் பற்றி உங்களுக்கு தெரியாத சில அம்சங்களை பாருங்கள்..




1) அப்பலோ கணினி
அப்போலோ 11 செயற்கைகோள் நிலவில் தரையிறங்க பயன்படுத்தப்பட்ட கணினிகளை விட உங்களது மொபைல் போன் சக்தி வாய்ந்தது. 

Saturday, May 16, 2015

செல்போனில் எடுத்து டெலிட் செய்யப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் உலா வருவது எப்படி..?


நீங்கள் செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால், உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.”அது எப்படி… என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது? என்று பலரின் மனதில் பல கேள்விகள் எழும்பும்.
உங்களுக்காக உண்மையில் நடந்த சில சம்பவங்கள் உதாரணங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. 
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள்.