Sunday, November 16, 2014

முல்லாவின் கடிகாரமும், கணவன் மனைவியும்....

 



முல்லா ஒருமுறை தன் வீட்டில் மாட்டுவதற்காக கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். 
சுவரில் கடிகாரத்தை மாட்ட ஆணி அடிக்கலாமென சுத்தியல் தேடினார். கிடைக்கவில்லை..
பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் கேட்டு வாங்கலாமென நினைத்தார். 

ஆனால், இந்த இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு கதவைத் தட்டி சுத்தியல் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என நினைத்து மறுநாள் காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார். 

மறுநாள்காலையில் பக்கத்து வீட்டுக்கு முல்லா கிளம்பும் போதே ஒரு யோசனை... 

"சுத்தியலை இரவல் கேட்க காலங்காத்தால வந்துட்டான் பாரு"- னு அவர் நினைச்சிட்டா என்ன பண்றது? 
சரி.. பிறகு போய் வாங்கிக்கலாம் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் முல்லா. 
   இப்படி ஒவ்வொரு முறை முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியலை இரவல் வாங்க கிளம்பும் போதும்.. 
"விளக்கு வைக்கற நேரத்தில சுத்தியல இரவல் கேட்டு வந்திருக்கான் பாரு"....
 "வெள்ளிக்கிழமை அதுவுமா சுத்தியலை யாரவது கடன் கொடுப்பாங்களா .." 

Saturday, November 1, 2014

தப்பித் தவறியும் தப்பு பண்ணாதீங்க..


கையடக்க மொபைல் போனில் 2ஜி நெட்பேக் இருந்தால் போதும். கொட்டோ கொட்டென 'செக்ஸ் ஸ்கேண்டல் வீடியோக்கள்’ கொட்டுகின்றன. 
ஓர் உதாரணம்- 
இந்தியாவில்  தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஃபைனான்சியர், தன் செல்போனை சர்வீஸுக்குக் கொடுக்க, அவருடைய பலான பலான வீடியோக்கள் பரவி, இப்போது அவர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.